நிலவைத் தொட்டதும் கவிழ்ந்த ஆய்வுக்கலம்
அமெரிக்காவின் ஒடிசியஸ் என்றழைக்கப்படும் ஆளில்லா ஆய்வுக்கலம் நிலவைத் தொட்டதும் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கலத்தை உருவாக்கிய தனியார் நிறுவனமான இன்டியுடிவ் மஷீன்ஸ் அவ்வாறு கூறியது. கடந்த வியாழக்கிழமை (22) ஒடிசியஸ் ஆய்வுக்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. முதலில் கலம் நேராய் இருப்பதாக இன்டியுடிவ் மஷீன்ஸ் கூறியது. பின்னர் கலம் ஒரு பக்கம் சாய்ந்துவிட்டதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் அல்டிமஸ் குறிப்பிட்டார்.… Read More


