நிலவைத் தொட்டதும் கவிழ்ந்த ஆய்வுக்கலம்

அமெரிக்காவின் ஒடிசியஸ் என்றழைக்கப்படும் ஆளில்லா ஆய்வுக்கலம் நிலவைத் தொட்டதும் கவிழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கலத்தை உருவாக்கிய தனியார் நிறுவனமான இன்டியுடிவ் மஷீன்ஸ் அவ்வாறு கூறியது.

கடந்த வியாழக்கிழமை (22) ஒடிசியஸ் ஆய்வுக்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. முதலில் கலம் நேராய் இருப்பதாக இன்டியுடிவ் மஷீன்ஸ் கூறியது.

பின்னர் கலம் ஒரு பக்கம் சாய்ந்துவிட்டதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் அல்டிமஸ் குறிப்பிட்டார்.

அதனால் தகவல்களைப் பதிவிறக்கம் செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

எனினும் ஒடிசியஸ்ஆய்வுக்கலம் நிலவில் தரையிறங்கியது வெற்றியாகவே கருதப்படுகிறது.

2030ஆம் ஆண்டுக்குள் மனிதனை மீண்டும் நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

The post நிலவைத் தொட்டதும் கவிழ்ந்த ஆய்வுக்கலம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்