அண்மையில் வபாத்தான முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட கலைஞர் மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் அவர்களைப் பற்றிய விசேட நிகழ்வு இன்று (27) காலை இலங்கை வானொலியில் 8.15 மணிக்கு ஒலிபரப்பாகும் மாதர் மஜ்லிஸ் நிகழ்வில் நினைவுக்கூரப்படவுள்ளது.
மர்ஹூமா ஹம்ஸா ஆரிப் முஸ்லிம் சேவையில் முதன் முதலாக மாதருக்கென ஒலிபரப்பான, “சௌத்துன் நிஸா” நிகழ்ச்சியை நடத்தியவர். இவரால் 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடாத்தப்பட்ட, இந் நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
புத்தளம், சிலாபம் மாவட்டத்தின் முதல் பயிற்றப்பட்ட ஆசிரியரான ஹம்ஸா ஆரிப், அதிபராகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் தமிழ் பண்டிதர் பரீட்சையிலும் சித்தியெய்தியவர்.
கல்வித்துறையில் எந்தவித கரிசனையும் காட்டாதிருந்த புத்தளம், சிலாபம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வியின் பால், விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
முன்னாள் மட்டக்குளி ஹம்ஸா பாடசாலை அதிபர் எம்.எச்.எம். ஆரிப் அவர்களும் முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட கலைஞராவார்.
முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர் எம். அஷ்ரப்கான், நாடக எழுத்தாளர் எம். அஸ்வத்கான் ஆகியோரின் மூத்த சகோதரியுமாவார். அன்னாரது ஞாபகங்களை நிகழ்ச்சியில் மீட்டுகிறார் சில்மியா ஹாதி. நிகழ்ச்சியை முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் பாத்திமா ரீஸா ஹுசைன் தயாரித்தளிக்கிறார்.
The post இன்று மாதர் மஜ்லிஸ் நிகழ்வில் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்