பூர்த்தி செய்யப்படாத கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள்

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.

தகுதி பெற்ற சுமார் 4000 பேரை நேர்முகப் பரீட்சைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினால் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

பணிபுரிந்த சிலர் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

The post பூர்த்தி செய்யப்படாத கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்