போலி விசாவில் கிரேக்கம் செல்ல முயன்ற நால்வர் கைது

மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்ட நால்வர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.இப்போலி விசாக்களைப் பெறுவதற்காக ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவை இவர்கள் தரகருக்கு வழங்கியதாகத் தெரியவருகிறது. இந்நால்வரும் (25) பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.

கைதானவர்கள் 21 முதல் 47 வயதுக்குட்பட்டவர்களென தெரிவிக்கப்படுகிறது. விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

The post போலி விசாவில் கிரேக்கம் செல்ல முயன்ற நால்வர் கைது appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்