இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் ‘உலகம் முழுவதும் எங்கள் கதைகள்’ சிறு கதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் ‘பென் கிளப்’ தலைவி எழுத்தாளர் சித்தி மசூறா சுஹூர்த்தீன் தலைமையில் நடைபெற்றது.
ஆற்றலும், ஆளுமையும் மிக்க “இலங்கை பென் கிளப்” (Pen Club) உறுப்பினர்களால், தொகுத்து வெளியிடப்பட்ட சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வி சட்டத்தரணி திருமதி மரியம் நளிமுத்தீன் கலந்துகொண்டார். இதில் மரியம் நளீமுத்தின் கணவர் கவிஞர் டொக்டர் நளிமுத்தீன் சிஹாப்தீன், பிரதி கல்வி பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், இணைப்பாளர் மிப்ராஸ் மன்சூர் உட்பட பெண் எழுத்தாளர்கள், இலக்கிய படைப்பாளிகள், பெண் கிளப் நிர்வாக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(பெரியநீலாவணை விசேட நிருபர்)
The post இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்