இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தற்போது பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம், இன்று (26) பிற்பகல் தேசபந்து தென்னகோனிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வழங்கப்பட்டது.

The post இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்