இந்திய உயர் ஸ்தானிகர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பிலுள்ள இந்திய இல்லத்துக்கு (India House) கடந்த புதன்கிழமை (21) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அழைத்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவு செய்யப்பட்டமைக்காக உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்ததுடன், கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டார்.

தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.

இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேயும் இச்சந்திப்பில் பங்குபற்றினார்.

The post இந்திய உயர் ஸ்தானிகர் – சிறீதரன் எம்.பி. சந்திப்பு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்