நாட்டில் 40,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக GMOA குற்றச்சாட்டு

நாட்டி 40,000 க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் உள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

வைத்திய உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை வைத்திய சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர் வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி, அவர்கள் இருக்கும் பிரதேசங்களிலோ அல்லது தமது சொந்த இடங்களிலோ நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

இலங்கையின் சுகாதார அமைப்புக்குள், நோயாளர் ஒருவருக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் திறனும் பொறுப்பும் அதிகாரமும் வைத்தியருக்கு மாத்திரமே உண்டு. இவ்வாறு செய்யக்கூடிய திறனோ அல்லது அதிகாரமோ வேறு எவருக்கும் கிடையாதெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.

The post நாட்டில் 40,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக GMOA குற்றச்சாட்டு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்