இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பிலான ஆய்வரங்கம்

எம்.ஐ.எம்.முஹியத்தீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையம், இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பிலான ஆய்வரங்கமொன்று (Annual Symposium) எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை முஸ்லிம்களிடையே வரலாற்றுப் பிரக்ஞை (History consciousness) குறைவாக உள்ளது. அது குறித்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரித்தல், வரலாறு தொடர்பான அறிவை வளர்த்தல், புதிய ஆய்வறிவை (Research Findings) முன்வைப்பதற்கான களத்தை ஏற்படுத்தல்,.வரலாறு தொடர்பான அறிவைப் பகிர்தல் (Exchange of knowledge) கலந்துரையாடல் ஆகியன, மிக முக்கியமாகவும் வரலாற்று ஆய்வுகளில் ஆய்வு முறையியல், விஞ்ஞானபூர்வ அணுகுமுறை தொடர்பான அக்கறையை அதிகரிக்கச் செய்தல் போன்ற விடயங்களில் முஸ்லிம் எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் ஊக்குவிப்பதும் அவர்களுக்கு ஓர் உந்து சக்தியைக்கொடுப்பதுமே இந்த ஆய்வரங்கின் முக்கிய நோக்கமாகும்.

நிலையத்தின் ஆளுநர் சபைத்தலைவர் பொறியியலாளர் ஜௌபர் இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில் நோக்க உரையை வரலாற்றுத்துறை பேராசிரியரும் புரூணை தாருஸ்ஸலாம் பல்கலைக்கழக ஓய்வு நிலைப்பேராசிரியருமான எஸ்.ஏ ஹுசைன்மியா நிகழ்த்துவார்.

The post இலங்கை முஸ்லிம்களது வரலாறு தொடர்பிலான ஆய்வரங்கம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்