காணிப் பிரச்சினைகளுக்கு நீதியமைச்சரால் ஆலோசனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பாக பல்வேறுபட்ட ஆலோசனைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், மட்டக்களப்பின் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்தனர்.

இந்நிலையில் மட்டக்களப்பில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டீனா முரளிதரனின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (24) அங்கு நடைபெற்றது.

இதன்போது காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சட்ட நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் கவனம் செலுத்தினர்.

The post காணிப் பிரச்சினைகளுக்கு நீதியமைச்சரால் ஆலோசனை appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்