சீனன்கோட்டையில் 25வருட காலம் தொடராக சேவையாற்றிய மருத்துவ தாதி கௌரவிப்பு

பேருவளை, சீனன்கோட்டைப் பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 25 வருட காலமாக குடும்ப நல சுகாதார மருத்துவ தாதியாக (Mid Wife) பணியாற்றிய திருமதி டபிள்யூ.எல். குமாரி நந்தனியை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்றைய தினம் (27) சீனன்கோட்டை, தர்கா வீதி பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதனை அமைப்பைச் சேர்ந்த அதிபர் பர்ஸானா ஹில்மி, பஹ்ரியா சர்பான் ஆகியோர் வழிநடாத்தினர். தர்கா வீதியிலுள்ள பௌஸியா இஸாமுதீன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது 25 வருடகாலம் சேவையாற்றிய மருத்துவ தாதியான குமாரி நந்தனியின் பாகுபாடற்ற சேவையை பாராட்டி இங்கு உரைகள் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் ஏற்பாட்டாளர்களினால் 25வருட காலம் பிரதேசத்துக்கு அர்ப்பணிப்போடு சேவையாற்றிய குடும்ப நல மருத்துவ அதிகாரி திருமதி குமாரி நந்தனிக்கு இதன்போது ஏற்பாட்டாளர்களினால் நினைவுச்சின்னம் மற்றும் பெறுமதியான பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

மேலும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட சீனன்கோட்டை பிரதேசத்தில் பணியாற்றும் பெண் சுகாதார மருத்துவ அதிகாரிகளும் இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post சீனன்கோட்டையில் 25வருட காலம் தொடராக சேவையாற்றிய மருத்துவ தாதி கௌரவிப்பு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்