Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது.

நிகழ்வின் முதன்மை அனுசரணையாளரான Nippon Paints இன் தலைமையில், Maxxis Tyres, Prima Kottumee, Ozone Water, Sri Lanka Insurance, ESDEE Battery உள்ளிட்ட மதிப்பிற்குரிய பங்காளிகளுடன் இணைந்து SLARDAR சங்மானது, அதிர வைக்கும் Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகி வருகிறது. கடந்த வருடம் Sri Lanka Super Series 2023 இல், MX Motocross மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் லஹிரு ஜீவந்த மற்றும் SLGT வீரர் உஷான் பெரேரா ஆகியோர் முறையே சம்பியன் ரைடர் பட்டத்தையும் வருடத்தின் சிறந்த சாரதி பட்டத்தையும் வென்றனர். அதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2024 தொடர் இடம்பெறவுள்ளது.

SLARDAR 2023 ஆம் தொடரில், கிரியுல்ல, நல்லவில் அமைந்துள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய, Mahameruwa Motorsports Arena அரங்கை SLARDAR அறிமுகப்படுத்தியிருந்தமையானது, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்திருந்தது. இந்த சிறப்பு மிக்க போட்டி அரங்கானது, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகிய இரண்டிற்குமான, உலகத் தரம் வாய்ந்த பந்தயப் பாதைகளைக் கொண்டுள்ளன. அத்துடன், உணவகப் பகுதி, நீச்சல் தடாகம், பயிற்சி அறைகள், தங்குமிட வசதிகள், ATV Track, 4×4 Challenge Track உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும்.

The post Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்