ஹரின் டி.எஸ். விஜயரத்னவை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ள Ceylon Tobacco நிறுவனம்

Ceylon Tobacco Company PLC (CTC) பெப்ரவரி 01, 2024 புகழ்பெற்ற கூட்டாண்மைத் தலைவர் ஹரின் டி.எஸ். விஜயரத்னவை அதன் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளது. இந்த நியமனம் மூலம், CTC பணிப்பாளர்கள் சபையில் தலைவர் சுரேஷ் ஷா, முகாமைத்துவப் பணிப்பாளர் மோனிஷா ஆபிரகாம், குஷான் டி அல்விஸ், கேரி டாரன்ட், ருமனா ரஹ்மான், ஸ்டூவர்ட் கிட், தௌஹிட் அக்பர் மற்றும் ஹரின் டி எஸ் விஜயரத்ன ஆகியோர் அடங்குவர்.

விஜேயரத்ன இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் இணை அங்கத்தவர் மற்றும் UKஇன் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினராக உள்ளார். Bahrain Investcorp வங்கி, Grindlays Bahrain வங்கி, Ernst & Young Bahrain மற்றும் Ernst & Young Sri Lanka ஆகிய நிறுவனங்களில் பெறப்பட்ட வெளிப்பாட்டின் மூலம் பொது நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் தணிக்கை ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.

அவர் DFCC வங்கி மற்றும் Trans Asia Hotels PLC இன் பணிப்பாளராகவும் இந்த நிறுவனங்களின் தணிக்கைக் குழுக்களின் தலைவராகவும் உள்ளார்.

MAS ஹோல்டிங்ஸின் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.

The post ஹரின் டி.எஸ். விஜயரத்னவை பணிப்பாளர் சபைக்கு நியமித்துள்ள Ceylon Tobacco நிறுவனம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்