தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில்,இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இவ்வாகன விபத்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்து கஹ ஹெதெக்ம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரே இதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து குடிநீர் விநியோகிக்கும் லொறியொன்று நேற்றிரவு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மோதியது.
இதில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேகக் கட்டுப்பாட்டை மீறிய லொறி, கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மோதியதால், விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
The post தெற்கு அதிவேக வீதியில் விபத்து ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்