நாட்டில், இம்மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவிலிருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
The post சுற்றுலாத்துறை: 18 நாட்களில் 138,736 பயணிகள் வருகை appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்