யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத் தூதுவராக செவிதி சாய் முரளி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (26) கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதராக 2021 முதல் இதுவரை செயற்பட்ட ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், டில்லிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இவருக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. செவிதி சாய் முரளி இதற்கு முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் துணைத் தூதராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
The post யாழ். புதிய இந்திய துணை தூதுவர் கடமையேற்றார் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்