காஸா மீதான யுத்தம் 140 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற அதேநேரம், இற்றை வரையும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களின் உயிர்களையும் காவு கொண்டுள்ளது. அவர்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்களாவர். அத்தோடு 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்துமுள்ளனர்.
காஸா சனத்தொகையில் 85 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்போரின் விளைவாக இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 14 இலட்சம் பேருக்கும் மேற்பட்டவர்கள் காஸாவின் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபாவிலுள்ள முகாம்களிலும் கூடாரங்களிலும் தங்கியுள்ளதாக ஐ.நா. நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து 23 இலட்சம் பலஸ்தீன மக்களைக் கொண்ட காஸா மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்தது. அன்று தொடக்கம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த யுத்தம் நவம்பர் 24 ஆம் திகதி முதல் ஏழு நாட்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையோடு நிறுத்தப்பட்ட போதிலும், அதன் பின்னர் யுத்தம் தொடர்ந்த வண்ணமுள்ளது. மற்றொரு யுத்த நிறுத்தத்திற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தொடர் யுத்தம் காரணமாக காஸாவிலுள்ள பலஸ்தீனியர்கள் பலவிதமான அசௌகரியங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்கொடுத்துள்ளனர். அவர்களது இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் விளைவாக காஸாவில் அனைத்துத் துறைகளும் அழிந்தும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. அவற்றில் சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் பாதிப்புக்களும் குறிப்பிடத்தக்கவையாகும். அதன் காரணத்தினால் அங்குள்ள சிறுவர்களையும் இந்நெருக்கடிகள் பெரிதும் பாதித்திருக்கின்றன.
காஸாவிலுள்ள பலஸ்தீன மக்கள் முகம்கொடுத்துவரும் இந்த அசௌரியங்களும் நெருக்கடிகளும் உலகளாவிய அவதானத்தை ஈர்த்துள்ளன. அதனால் இப்போரை உடனடியாக நிறுத்துமாறும் பணயக் கைதிகளை விடுவிக்குமாறும் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை தங்குதடையின்றி அனுப்பி வைக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஸாவில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக காஸா சிறுவர்களுக்கான நிதியமொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கேற்ப அமைச்சுக்கள் அரச நிறுவனங்களுடன் இணைந்து இம்முறை இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்காக செலவிடப்படவிருக்கும் நிதியை இந்நிதியத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதியும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதன் நிமித்தம் பொதுமக்களது பங்களிப்பும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் சுகாதார வசதிகளுக்காக இலங்கையினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஐக்கிய நாடுகள் விதிவிடப் பிரதிநிதி ஊடாக வழங்கி வைப்பட உள்ளது.
ரமழான் மாதம், காஸா குழந்தைகளுக்கான நிதியத்திற்கு நிதி அன்பளிப்புகளை அளிக்க விரும்பும் நன்கொடையாளர்கள் எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வங்கியின் தப்ரோபேன் கிளையில் வைப்பிடவும் வங்கிக் கணக்கு இலக்கமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தினதும் இந்நடவடிக்கையை மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். காஸாவில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன சிறுவர்களின் சுகாதார நலன்களுக்காக தனியான நிதியமொன்றை அமைக்க ஜனாதிபதி எடுத்திருக்கும் இந்நடவடிக்கையானது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்படக் கூடியதாகும். பலஸ்தீனின் எதிர்கால சந்ததியினரது …read more
Source:: Thinakaran தினகரன்