உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT

U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர்.

ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில் முன்னேற்றமடைவது தொடர்பில் இங்கு பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. உலக வங்கியின் அறிக்கையின் படி, தெற்காசியா ஒரு “புதிய காலநிலை இயல்பு நிலை” ஐ அனுபவித்து வருகிறது.

இது வெப்ப அலைகள், சூறாவளி, வரட்சி, வெள்ளம் போன்ற எதிர்பாராத வானிலை நிலைமைகள் என குறிப்பிடப்படுகிறது. அதிகரித்து வரும் சனத்தொகை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையுடன், தெற்காசியா பிராந்தியத்தின் உணவு மற்றும் போசணை தொடர்பான பாதுகாப்பில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தடுப்பது தொடர்பில் அதன் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியுள்ளது.

USSEC இன் South Asia and Sub-Saharan Africa (SAASSA) பிராந்திய பணிப்பாளர் Kevin Roepke, காலநிலை நெகிழ்வுத் தன்மை கொண்ட உணவு முறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அவர் இங்கு தெரிவிக்கையில், “USSEC இன் Sustainasummit மன்றம் மூலம், ஒரு வலுவான உலகளாவிய உணவு முறையை உருவாக்குவதற்காக, US Soy போன்ற நிலைபேறான மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து உணவு மற்றும் விவசாய வணிக நிறுவனங்களிடையே மூலோபாய ரீதியான உரையாடல்களை ஏற்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

US Soy, அதன் உயர் போசணைப் பொதி மற்றும் நம்பகமான விநியோகம் மூலம், தெற்காசியாவின் அதிகரித்து வரும் புரதத் தேவையை நிலைபேறான வகையில் பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமான நிலையை அது பெற்றுள்ளது.” என்றார்.

The post உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்