வங்கி கடன்கள் தொடர்பான திருத்த சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

– முயற்சியாண்மைக்கான கடன்திட்ட முறை
– இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம்

1990 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள கடன்களை அறிவிடுதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 08 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 03 வருடகாலமாக நிலவுகின்ற பொருளாதார பின்னடைவுகள் காரணமாக உள்ளுர் பாரியளவிலான, நடுத்தரளவிலான மற்றும் சிறியளவிலான வியாபாரிகள் தமது வியாபாரங்களை நடாத்திச் செல்வதற்கு பல சிரமங்களை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ளது. தற்போது ஓரளவுக்கு பொருளாதாரம் மீண்டும் ஓரளவுக்கு வலுப்பெறுவதுடன், அதற்குத் தேவையான ஆரம்பப் படிமுறைகள் திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், கடந்த காலத்தில் சிறிய மற்றும் நடுத்தரளவிலான வியாபாரிகளால் தமது வியாபார நடவடிக்கைகளுக்காக வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை இன்னும் சரியான வகையில் செலுத்துவதில் பிரச்சனைகள் நிலவுவதாகப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலைமையின் கீழ் கடன் செலுத்தாமல் விடுவதால் வியாபாரிகளின் குறிப்பிடத்தக்களவு ஆதனங்களை தற்போது காணப்படுகின்ற சட்டங்களைப் பின்பற்றி வங்கிகள் கையகப்படுத்தி பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் வியாபாரத் துறையில் மேலெழக்கூடிய நெருக்கடி நிலைமைகளுக்குத் தீர்வுகண்டு வங்கிகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கடன் செலுத்துவதற்காக குறிப்பிட்டளவு சலுகைக் காலத்தை வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.அதற்கமைய, கடன் செலுத்தாமையால் வங்கிகளால் கடன்படுநர்களின் ஆதனங்களை கையகப்படுத்துவதற்காக பின்பற்றுகின்ற பொறிமுறையை 2024.12.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், அதற்குரிய சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்காக 1990 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறிவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவைத் திருத்தம் செய்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்தல்

நிலவுகின்ற பொருளாதார பின்னடைவின் விளைவுகளாலும் மற்றும் அதன் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான வெளிப்புறக் காரணிகளின் விளைவுகளாலும் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை மற்றும் இதர வணிகத் தொழிற்பாடுகள் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினருக்கு தமது தொழில்முயற்சிகளை மேற்கொண்டு செல்வதற்குப் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

அதற்கான சலுகையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறைக்கு தொழிற்பாட்டு மூலதனம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு தத்தமது வியாபாரங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தேவையான கடன் வசதிகளை அனுமதிபெற்ற வணிக வங்கிகள் மற்றும் அனுமதிபெற்ற விசேட வங்கிகள் மூலம் சலுகை வட்டி வீதத்தில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டு கூறுகளாக குறித்த வேலைத்திட்டத்திற்கு 20 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதுடன், அதில் 15 பில்லியன் ரூபாய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மற்றும் புதிய …read more

Source:: Thinakaran தினகரன்