பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ‘ரமழான் பஸார்’

கொழும்பு, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் (தேசிய) கல்லூரியில் பழைய மாணவிகள் சங்கம் பாடசாலை கட்டட நிதிக்காக, ஒழுங்கு செய்த ‘ரமழான் பஸார்’ விற்பனை சந்தை சனிக்கிழமை (24) கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் பாத்திமா நஸ்ரியா முனாஸ் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் ஆகியோர் தலைமையில் ஆரம்பமான இச்சந்தையில் பாடசாலை மாணவிகளது உற்பத்திகள், கண்காட்சிகள் விற்பனைக்கு விடப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பைசால் செர்மிக் முகாமைத்துவ பணிப்பாளர் பைசால் மற்றும் டைமன்ட் நிறுவனத்தின் விற்பனை முகாமைத்துவ முகாமையாளர் சேர்த்திக்காவும் அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர். அத்துடன் பிரதம அதிதி இக்கல்லுாரியின் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிர்மாணத்திற்கு நிதி அன்பளிப்பினை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

The post பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ‘ரமழான் பஸார்’ appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்