மகளிர் கால்பந்து: மகாஜனா இறுதிப் போட்டிக்குத் தகுதி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி தகுதிபெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் அண்மையில் (22) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட தெல்லிப்பளை மகாஜனா 7–0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்படி அந்த அணி இறுதிப்போட்டியில் களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை மார்ச் மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் எதிர்கொள்ளவுள்ளது.

The post மகளிர் கால்பந்து: மகாஜனா இறுதிப் போட்டிக்குத் தகுதி appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்