நாளை முதல் கோளரங்கம் சில நாட்களுக்கு மூடப்படுகிறது

இலங்கை கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (27) முதல் மார்ச் 12ஆம் திகதி வரை கோளரங்கம் மூடப்படுவதோடு, அன்றைய தினங்களில் பொதுக் கண்காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோளரங்கத்தின் புரொஜெக்டர்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதனாலேயே இக்கோளரங்கம் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

The post நாளை முதல் கோளரங்கம் சில நாட்களுக்கு மூடப்படுகிறது appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்