அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்துக்கு பழைய மாணவர் சங்கத்தினால் மடிகணினி அன்பளிப்பு

பழைய மாணவர் சங்கத்தினால் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்திற்கு மடிகணினி வழங்கி வைக்கப்பட்டது. பழைய மாணவர் சங்க செயலாளர் அதனை வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை இணைய உலகுக்கு ஏற்றால்போல் வடிவமைப்பது இன்று சவால் நிறைந்த ஒன்றாக மாறிப்போயுள்ளது.

அந்த வகையில் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலய அதிபர் மடிகணினியின் தேவையின் அவசியம் கருதி பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திடம் கோரிக்ைக விடுத்திருந்தார். குறித்த கோரிக்கையினை கருத்திற் கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும், அரசினர் ஆண்கள் வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளருமான டொக்டர் ரஜாப் தனது சொந்த நிதியினூடாக மடிகணினியைப் பெற்று பாடசாலை அதிபர் ஐ.எல்.சாஜித்திடம் வழங்கி வைத்தார். இதன் போது சங்கத்தின் உறுப்பினரும், எம்.ஜே.எஸ். குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.எம். ஜரீன் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலையின் கோரிக்கைகளை செவிசாய்த்து இவ்வாறான உதவி, ஒத்தாசைகளை வழங்கும் பழைய மாணவர் சங்கத்திற்கு பாடாசலை சமூகத்தினர் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.

The post அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்துக்கு பழைய மாணவர் சங்கத்தினால் மடிகணினி அன்பளிப்பு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்