கொத்மலை ஓயாவில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற மாணவர்களுள் ஒரு மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை நகரைச் சேர்ந்த திலிப கமகே (14) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை, லிந்துலை, நாகசேனை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. லிந்துலை நாகசேனை பிரதேசத்திலிருந்து பாயும் கொத்மலை ஓயாவில் குளிப்பதற்கு சிறுவர்கள் குழுவொன்று, நேற்று பிற்பகல் சென்றுள்ளது.

இதன்போது கொத்மலை ஓயாவில் நீராடிய இச்சிறுவர்களில் ஒருவர் காணாமல் போனதையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதல் நடத்தினர்.இதன்போது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

The post கொத்மலை ஓயாவில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்