தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சுற்றிவளைப்பு 43 சந்தேக நபர்கள் கைது

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள்,கேரள கஞ்சா என்பனவைகளை வைத்திருந்தவர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 43 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு கடந்த (21) காலை 5.45 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதற்காக 120 பொலிஸாரும் 15 புலனாய்வு பிரிவினரும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருள் 04 பொதிகள், 03 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் மற்றும் 02 கேரளா கஞ்சா பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டவர்களினுள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஐவரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன் அறிவித்தல் எதுவுமின்றி திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது பொருளாதார மத்திய நிலையத்திற்கு உட்செல்லும் வெளிச்செல்லும் வாயில்களில் சோதனை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

The post தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சுற்றிவளைப்பு 43 சந்தேக நபர்கள் கைது appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்