இசைமொழி ஊடாக இன ஒற்றுமையை வெளிப்படுத்திய தமிழ், சிங்கள மாணவர்கள்

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கிலங்கையின் பெரும் கலைக்கூடம். 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட இது கடந்த 20 வருட காலங்களை கடந்து வந்துள்ளது. அதனை அருகிலிருந்து அவதானிக்கும் வாய்ப்பும், அதனோடு பயணிக்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அதனால் அதனை உள்ளும் புறமும் அறியும் வாய்ப்பும் வாய்த்திருக்கிறது.

அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டோர் பலர். அண்மைக் காலமாக அதன் செயல்பாடுகள் பல்துறைப்பட்டனவாக வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அங்கு கல்விபயிலும்

நடன, நாடக, ஓவியத்துறை மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டி வருகிறார்கள். இந்தப் பின்னணியிலேயேதான் அண்மையிலே அந்த நிறுவகம் கொழும்பு கட்புல, ஆற்றுகைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இசைநிகழ்வை பார்க்க வேண்டி உள்ளது

இது நடந்தது 14.02.2024 அன்று ஆகும். ஏறத்தாழ முப்பதுக்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களும் 60 இற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களும் இணைந்த நிகழ்வு ஒன்றை மேடையில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. மேடையில் பெரும் தொகை மாணவரக்ள் இணைந்து கொண்ட பெருநிகழ்வு அது. இதற்கு சிறப்பு விருந்தினராக நான் அழைக்கப்பட்டு இருந்தேன். இரண்டு பல்கலைக்கழக வேந்தர்களும் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இதன் ஒழுங்கமைப்பாளராகச் செயல்பட்டவர் திருமதி காமினி. கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் இனக்குழும இசையில் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டிருப்பவர். அவருக்கு உதவியாக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி பிரியா ஜதீஸ்வரன், இசைத் துறைத் தலைவி கலாநிதி நிர்மலேஸ்வரி ஆகியோர் இருந்திருக்கிறாரக்ள்.

ஒளி வசதிகளை நாடக விரிவுரையாளர் தர்மலிங்கம் செய்திருந்தார். கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு இளைஞர். அவரது பெயர் றோகன் நெத்சிங்கா. அவர் ஒரு இசைப்பேராசிரியர். அவர் ரஷ்யாவில் இசைத்துறையில் ஆராய்ச்சி செய்தவர். இனக்குழும இசை (Ethnomusicology) அவரது ஆய்வுத்துறையாகும். அவரோடு உரையாடும் போது அவரது ஆர்வமும் அறிவும் செயல்திறனும் தெரிந்தன.

கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழக இசைத்துறையும் விபுலானந்த அழகியல் கற்கைகைகள் நிறுவ இசைத் துறையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. இசை நிகழ்வு பெரும்பாலும் இரு இனத்தாரிடமும் பயில் நிலையிலுள்ள கிராமிய இசைகளையே மையம் கொண்டிருந்தது. தாலாட்டு பாடல், ஒப்பாரிப் பாடல், சடங்குப் பாடல்,வேடிக்கைப் பாடல், நாடகப் பாடல் என அவை அமைந்திருந்தன. சிங்கள, தமிழ் இசை மரபுகளின் ஒற்றுமையை அங்கே காண முடிந்தது.

சிங்கள மாணவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடியதும், தமிழ் மாணவர்கள் சிங்களப்பாடல்களைப் பாடியதும் பின்னர் இரு சாராரும் இணைந்து சில பாடல்களைப் பாடியதுமான அந்த ஒற்றுமை மனதைக் கவர்ந்தது. இந்த அழகிய தீவில் வாழுகின்ற சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையே பெரும் சுவராக நிற்பது மொழியாகும். ஒருவர் மொழியை ஒருவர் அறியாத நிலை. நமது கல்வித் திட்டம் காரணமாக சிறு வயதில் இருந்தே இரு இன மாணவர்களும். மற்றவர்கள் மொழியை பூரணமாக அறிகின்ற வாய்ப்பு வாய்க்கவேயில்லை.

மொழி என்பது வெறும் உரையாடல் சாதனம் மாத்திரம் அல்ல, அது உணர்வு சார்ந்தது, ஒரு சமூகத்தின் வாழ்க்கை சார்ந்தது, அச்ச சமூகத்தின் பண்பாடு சார்ந்தது. மொழியை அறிவதன் …read more

Source:: Thinakaran தினகரன்