கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

“அறிவால் உலகை ஆள்வோம், அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் தொணிப்பொருளில் புத்தளம் பீ.சீ.எம்.எச். நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கரைத்தீவு சேராக்குழி சிங்கள வித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆசிரியர் எச். அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் கரைத்தீவு பிரதேச இணைப்பாளர் முஹம்மது சமான் ஆகியோருடன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இதன் போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

The post கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்