ஜே.வி.பி மற்றும் ஐ.ம.சவுக்கு நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் கிடையாது

– நாட்டின் அரசியல் வரலாற்றை மாற்றியவாறு மார்ச் மாதத்தில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்குவோம்

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் ‘புதிய கூட்டணி’ முன்னோக்கி செல்வதாக, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் (24) நடைபெற்ற புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நிமல் லான்சா இக்கருத்தை வெளியிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிமல் லான்சா,

“புதிய கூட்டணியின் பலத்தை கட்டியெழுப்புவதற்காக இங்கு வந்துள்ள மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எமது வேலைத்திட்டத்திற்கு சக்தியாக இப்பவர்களே இங்கு வந்துள்ளார்கள். இந்த புதிய கூட்டணியானது, வாக்குறுதிகளை அளிக்கும் ஒன்று அல்ல, இது ஒரு வேலைத்திட்டத்துடன் முன்னோக்கி செல்லும் பயணமாகும். வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்ததாலேயே 70 வருடங்களாக இந்த நாடு அழிந்தது. வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டியிருந்தது. இல்லையெனில், பணத்தை அச்சடிக்க வேண்டியிருந்தது. வாக்குறுதிகளை நிறைவேற்ற பணமில்லை.கடன் வாங்கி பணத்தை அச்சிட்டதால் நாடு அழிந்தது. எனவே இந்த புதிய கூட்டணியின் முக்கிய நோக்கம் மக்களுக்கு உண்மையை கூறுவதாகும். சத்தியத்தை பேசுவது, மக்களுக்கு யதாத்தத்தை புரிய வைப்பதாகும். அவ்வாறு அல்லாமல் பொய் கூறுவதல்ல. திருடர்கள் பிடிபட்டால் பொருளாதாரம் உயரும் என ஜே.வி.பி மேடைககு மேடை ஏறி கூறி வருகிறது. திருடர்களை பிடிக்க 2015ல் FCID அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறான ஒரு திருடனும் பிடிபடவில்லை.மீண்டும் அநுரகுமார வேலைத்திட்டம் எதனையும் முன்வைக்கமாட்டார்.

புதிய கூட்டணியின் இரண்டாவது கூட்டம் சனிக்கிழமை கொழும்பில்

மறுபுறம், ஐ.ம.ச. தலைவர் தொடர்ச்சியாக வாக்குறுதிகளை அளித்து வருகிறார். வாக்குறுதிகளை வழங்க உங்களிடம் பணம் இருக்கிறதா? பணம் இல்லை. இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைப்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் பணம் தேட முடியாது. மரங்களிலிருந்து பணத்தை பறிக்க முடியாது. மந்திரத்தால் கூட பெற முடியாது. பொருளாதார திட்டம் கட்டாயமாக வகுக்கப்பட வேண்டும். ஜே.வி.பி.யின் மேடைகளில் ஒரு கலைஞரை அழைத்து வந்து பாடலைப் பாட வைத்தவுடன், ஒரு நடிகையை வரவழைத்து புராணக் கதை சொல்ல வைத்தால், அது ஒரு பெரிய வேலை என்று நினைக்கிறார்கள். அண்மையில் ஒரு மேடையில், 100 பெண்கள். 200 மார்பகங்கள் என சொல்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் இவர்கள்? அசிங்கமாக பேசுகிறார்கள். விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும். கொழும்பில் இருந்து காலி வரை மார்பகங்களைக் காட்டிக் கொண்டு நடக்க வேண்டும் என்கிறார்கள். இவை வேலைத்திட்டங்கள் அல்ல. நாட்டை கட்டியெழுப்ப வேலைத்திட்டத்தை முன்வைப்பது அவசியம்.

‘புதிய கூட்டணி’ உடன் இணைந்த ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணி கட்சி

நாங்கள் வரும்போது கொடுப்போம் என ஐ.ம.சவினர் சொல்கிறார்கள். இருந்தால் கொடுங்கள். கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டும். தகுதியற்றவர்களுக்கு வழங்கிப் பயனில்லை. அதை தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும். அப்படி நடந்தால் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். வீழ்ந்த குழிக்குள்ளேயே மீண்டும் நாட்டை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது. உண்மையையும் யதார்த்தத்தையும் சொல்லி மக்களை எம் …read more

Source:: Thinakaran தினகரன்