சீன கடலோரக் காவல் படைக் கப்பல்களுக்காக எமது கப்பல்களை நிறுத்தத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள தாய்வான் கடல் சார் விவகார அமைச்சர் குவான் பி லிங்க், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது சீனக் கடற்பரப்புக்கு அருகில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கடல்சார் சுற்றுலா இயக்குனர்களுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். அதேநேரம் சமாதானத்தை உறுதிப்படுத்தவும் ஜியன்மென் மற்றும் கின்மென் கடற்பரப்பில் அமைதியைப் பேணவும் அவர் சீனாவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
சீனக் கடல் எல்லைக்கு அருகில் தவறுதலாகச் சென்ற தாய்வானின் சுற்றுலா கப்பலொன்று சீனக் கடலோரக் காவல் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதோடு கப்பலில் இருந்தவர்களின் ஆவணங்களும் பரீட்சிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்தே தாய்வான் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
The post சீன கடற்பரப்பை தவிர்க்க தாய்வான் அரசு அறிவுறுத்தல் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்