மனம் கவர்ந்த நடிகை யார்?

கடந்த ஆண்டு வெளியீடு கண்ட தமிழ் திரைப்படங்களில் எடிசன் திரை விருது தேர்வுப் பட்டியலில் முன்னணி திரை நட்சத்திர நடிகைகளின் சிறந்த நடிகைக்கான வரிசையில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சமந்தா, நயன்தாரா, கங்கனா ரனோட், ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ், மனம் கவர்ந்த நடிகை வரிசையில் தமன்னா நயன்தாரா திரிஷா ப்ரியா பவானி சங்கர் சமந்தா, ராஷ்மிகா மண்டனா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த கால எடிசன் திரை விருதுகளில் வாக்கு வித்தியாசத்தில் நடிகர்களை விட, நடிகைகள் அதிக வாக்குகள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இவ்வாண்டும் உலகத் தமிழர்கள் நடிகர்களை விட நடிகைகளுக்கு அதிகமான இணைய வாக்குகளும் சமூக வலைதள வாக்குகளும் அதிகமாக செலுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து வட்ஸ் அப் மூலம் எங்கள் வாக்கு குறிப்பிட்ட நடிகையை பெயரில் வாக்கு செலுத்தி உள்ளேன் என குறுஞ்செய்தியும் அனுப்பி வருகின்றனர்.

இதன் மூலம் இவ்வாண்டு நடிகர்களை விட நடிகைகளுக்கு அதிகமான வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என எடிசன் விருது குழு தலைவர் தெரிவித்தார். மேலும் பல்வேறு நாடுகளில் தினசரி நாளிதழ், பண்பலை, தொலைக்காட்சி மூலம் விளம்பரங்கள் வருவதாலும் இணைய வாக்குகள் அதிகமாக வருகின்றன.

மேலும் தமிழ் திரைத்துறையினரை அதிகமாக நேசிக்கும் வாக்களிக்கும் நாடுகளாக ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.

இந்தியாவை விட அதிகமான வாக்குகளை www.edisonawards.in பெற்று வருகிறது.

தொடர்புக்கு +60166167708

The post மனம் கவர்ந்த நடிகை யார்? appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்