மணல் அகழ்வதாகக் கூறி புதையல் தோண்டிய நபர்கள்

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்தில் வீதி திருத்த வேலைக்காக மணல் அகழ்வதாகக் கூறி புதையல் தோண்டிய 4 சந்தேக நபர்களை நேற்று முன்தினம் (22) பொலிஸார்

கைது செய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து வைகோ இயந்திரம் மற்றும் டிப்பார் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். புதுமாத்தளனிலுள்ள வீட்டுக் காணியொன்றில் புதையல் தோண்டுவதாக கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், இச்சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

புதுமாத்தளனைச் சேர்ந்த இருவரும், ஒட்டுசுட்டானைச் சேர்ந்த ஒருவரும், கைவேலியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மணல் அகழ்வதாகக் கூறி புதையல் தோண்டிய நபர்கள் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்