கொஸ்கமவில் மனத்தூய்மைக்கான தியானப்பயிற்சி மார்ச் 10 இல் ஆரம்பம்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கின் அவர்களிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த ச. கோயங்கா அவர்களால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியான முறை பற்றிய அறிமுகம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

குருஜி எஸ். என். கோயங்கா அவர்களின் வழிகாட்டலில் கொஸ்கம, பஹலா கொஸ்கம, தம்மசோபா விபாசனா தியான மையத்தில் மார்ச் 10ம் திகதி முதல் 21ம் திகதி வரை பத்து நாட்கள் தியான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

இவர்களது இலவச பயிற்சிநெறியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். விபாசனா தியான மையத்தில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் 0772448608, 0773504491, 0774935850 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், www.sobha.dhamma.org என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

மனத்தூய்மைக்கான இந்த தியானப் பயிற்சி நெறியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

எச்.எச்.விக்கிரமசிங்க…?

ச.கோயங்கா…?

The post கொஸ்கமவில் மனத்தூய்மைக்கான தியானப்பயிற்சி மார்ச் 10 இல் ஆரம்பம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்