வாகன விபத்தில் பெண் மரணம்

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றும் திருகோணமலையிலிருந்து தென் பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் படுகாயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை கந்தளாய் ஹபரண வீதி, அலுத்ஓயா என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிண்ணியா மத்திய நிருபர்)

The post வாகன விபத்தில் பெண் மரணம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்