அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வரும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசாவின் உதவியுடன் ஒடிஸியஸ் என்ற விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவம் அருகே தரையிறங்கியுள்ளது.
இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல்
வணிக விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் அமெரிக்காவை சேர்ந்த விண்கலம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்தில் இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
The post அமெரிக்காவின் முதல் தனியார் விண்கலம் நிலவை தொட்டது appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்