இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உச்சத்துக்கு உயர்ந்து வரும் வேளையில், உலகின் முன்னணி பிராண்டுகள் அனைத்தும் இந்தியாவில் பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ கட்டாயம் விநியோகம் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் தயாரிப்பிலும் அடித்தளம் அமைத்தது தமிழ்நாடு என்றால் மிகையில்லை.
குறிப்பாகப் பாக்ஸ்கான் வருகை மூலம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதிக்கும் வழிவகுத்தது. இதன் பின்பு தான் சீன பிராண்டுகளைத் தாண்டி சாம்சங், அப்பிள் போன்றவை இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை உருவாக்கி இன்று வரையில் வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் புதிய வரவாக அமெரிக்க நிறுவனமான கூகுள் இந்தியாவில் தனது பிக்சல் ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிர்வாகம். இந்தியாவில் கூகுள் ஏற்கனவே தனது குரோம்புக் மடிக்கணினிகளைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுள் தனது விநியோகிஸ்தர்களுக்கு அடுத்தக் காலாண்டுக்குள் இந்தியாவில் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே பிக்சல் 8 போன்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்தக் காலாண்டுக்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இந்தத் திட்டத்தில் இந்திய பிரதமர் அலுவலகம் மற்றும் ஐ.டி துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவா ஆகியோருக்கு நன்றி எனச் சுந்தர் பிச்சை 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி அறிவித்திருந்தார். அப்பிள் போல் கூகுள் நிறுவனமும் தனது உற்பத்தி விநியோகச் சங்கிலியை செயினைச் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றி வருகிறது. கூகுள் நிறுவனத்தின் சப்ளையர்கள் வரும் வாரங்களில் அதன் உயர்தர மாடலான பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கான தயாரிப்புத் தளத்தை நிறுவி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் உற்பத்தி செய்யத் தொடங்கும் என்று தெரிகிறது.
The post ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உச்சம் தொட போகிறது தமிழகம்! appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்