அரச நிறுவனங்களுக்கிடையில் தொடர்புகள் காணப்படாத நிலை காரணமாகவே நாட்டின் அபிவிருத்தி சீர்குலைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தலின் போது மத்திய அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கிடையில் இணைந்த அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது முக்கியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், மத்திய அரசாங்கம் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை நிறுவனங்கள், அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான யோசனைகளை தயாரிக்கும் போது கிராமிய மட்ட மக்களின் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
அந்த வகையில் மாவட்ட இணைப்புக் குழுக்கள் ஊடாக மேற்படி நிறுவனங்களுக்கிடையிலான இணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சிறந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
The post இணைந்த அபிவிருத்தித் திட்டங்களே நாட்டுக்கான இன்றைய தேவையாகும் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்