சிறைச்சாலை நெரிசல்களை தீர்க்க திறந்தவௌிக்கு கைதிகள் மாற்றம்

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ள அரசாங்கம்,புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட யுக்திய நடவடிக்கைகளாலே, கைதிகள் அதிகரித்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி, சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய கட்டடங்களின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தும் அதேவேளையில்,கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post சிறைச்சாலை நெரிசல்களை தீர்க்க திறந்தவௌிக்கு கைதிகள் மாற்றம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்