“ஆண்டவரே, நீர்மீண்டும் வரும் வரையிலும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.”இதுவே நமது நம்பிக்கையின் மறைபொருளாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இது நமக்கெல்லாம் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் இயேசுவின் சீடர்களுக்கு,அவருடன் கூடவே வாழ்ந்தவர்களுக்கு இது மாறுபட்டவிடயமாகும். இன்றைய நற்செய்தியில் இயேசுமீண்டு;ம் எருசலேமுக்குசென்று தலைமைக் குருக்களின் கரங்களில் ஒப்படைக்கப்படுவது குறித்து பேசுகிறார்.
அவர்கள் அவரை உரோமையரிடம் ஒப்படைப்பர்,அவர்கள் அவரை சித்ரவதைகள் புரிந்து சிலுவையில் அறைவர், ஆனால், மூன்றுநாட்களின் பிற்பாடுஅவர் சாவிலிருந்து உயிர்த்தெழுவார். இவை எதுவும் சீடர்களுக்கு உண்மையானதாகத் தெரியவில்லை.
சீடர்களுக்கு புரியாத பல விடயங்களைக் குறித்து இயேசு எடுத்துரைத்தார்.
ஆனாலும் சீடர்கள் இயேசுவின் புகழ்,அவர் மக்கள்மீது செலுத்திய சக்திவாய்ந்த தாக்கம் குறித்து கவனம் செலுத்தினர். அவர்கள் அவரால் புரியப்பட்ட நம்பமுடியாத புதுமைகளைக் கண்டனர்.
யாக்கோபு மற்றும் யோவானின் தாயார் தனது பிள்ளைகள் இறையரசில் இயேசுவின் நெருங்கிய ஆலோசனையாளர்களாக இருக்கவேண்டுமென விரும்பினார். யாருமே பாடுகள்,மரணம் குறித்து கேட்க விரும்பவில்லை. அவர்களது கவனமெல்லாம் அதிகாரம்,பதவி,கௌரவத்திலேயே தங்கியிருந்தது.
தனது வாழ்வின் நோக்கமும்,முழுக் கவனமும் யாதெனில்,“பணிவிடைபெறவல்ல, மாறாகபணிபுரியவே என்பதுடன் தன் வாழ்வினை பலருடைய மீட்புக்காக வழங்கவே”என்பதனை இயேசுஅவர்களுக்கு நினைவூட்டுகின்றார். இதனை புனித சனிக்கிழமையின் பாஸ்கா புகழுரையில்,“அடிமையை மீட்குமாறு தம் மகனையே அளித்த அன்புப் பெருக்கே” என்றுபாடுகிறோம்.
The post தவக்கால சிந்தனை appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்