பத்துமுக்கு பதிலாக அவிஷ்க

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இருந்து உபாதைக்கு உள்ளாகி இருக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க நீக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானுக்கு எதிராக அண்மையில் நடந்த மூன்றாவது டி20 போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் இல்லாதபோதும் அவர் தொடர்ந்து வலியை உணர்வதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டி20 குழாத்தில் நிசங்கவுக்கு பதில் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார். ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய அவிஷ்க 13 மாதங்களுக்கு முன்னரே கடைசியாக டி20 சர்வதேச போட்டியில் ஆடியிருந்தார்.

ஐ.சி.சி. தடையால் பங்களாதேஷுக்கு எதிரான முதல் இரு போட்டிகளில் வனிந்து ஹசரங்கவினால் ஆட முடியாத நிலையில் இலங்கை டி20 அணித் தலைவராக சரித் அசலங்க செயற்படவிருப்பதோடு மேலதிக வீரராக சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சே அழைக்கப்பட்டுள்ளார்.

The post பத்துமுக்கு பதிலாக அவிஷ்க appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்