- 10 படகுகளை கொண்டுவர மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை
- தமிழக அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை
இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளில் மீட்கும் நிலையிலுள்ள
10 படகுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட மீட்புக்குழுவினர் இலங்கை செல்ல அனுமதி வழங்க வேண்டுமென மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு – இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழ்நாட்டு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி, மத்திய பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவ்வாறான கைது சம்பவங்களில் மத்திய அரசு தலையிட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது
The post இந்திய-இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடன் நடத்த வலியுறுத்து appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்