கொமர்ஷல் வங்கிக் குழுமம் 2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் 56.816 பில்லியன்களை மாதாந்தம் சராசரியாக 18.939 பில்லியன்கள் என்ற ரீதியில் கடனாகக் கொடுத்துள்ளது. இதன் மூலம் வருட இறுதியில் வங்கியின் கடன் புத்தகம் 1.296 ட்ரில்லியன்களாக பதிவாகி உள்ளது. பொருளாதார சீராக்கத்துக்கு உதவும் வகையில் கடன் வழங்கும் போக்கில் உறுதியானதோர் நிலை இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2023 டிசம்பர் 31ல் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் வைப்பும் அபரிமிதமாக அதிகரித்து 109.408 பில்லியன்களாக உள்ளது. இதன் மாதாந்த சராசரி 36.469 பில்லியன்களாகும். இது வங்கியின் உறுதியான வைப்பு தளத்தை வெளிப்படுத்துவதோடு கொந்தளிப்பு மிக்க நுண் பொருளாதார நிலைகளிலும் நிதி இடை நிலையில் கவனம் செலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. வைப்பு வளர்ச்சி வருடத்துக்கு வருடம் 8.6 வீதமாக வளர்ச்சி கண்டு மீளாய்வுக்கு உட்பட்ட காலப் பகுதியில் 2.148 ட்ரில்லியன்களாக உள்ளது.
இந்தக் குழுமம் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக வங்கியையும், அதன் இணை மற்றும் கிளை நிறுவனங்களையும் உள்ளடக்கியது. இலங்கையின் பங்கு பரிவர்தனையில் அது தாக்கல் செய்துள்ள அறிக்கையின் படி குழுமத்தின் மொத்த சொத்துக்கள் 156 பில்லியன்களால் அல்லது வருடத்துக்கு வருடம் 6.24 வீதத்தால் அதிகரித்து மீளாய்வுக்கு உட்பட்ட காலப் பகுதியில் 130 பில்லியன்களாக அல்லது 5.15 வீதமாக காணப்பட்டு 2023 டிசம்பர் 31ல் 2.656 ட்ரில்லியன்களாக உள்ளது.
The post நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதையில் கொமர்ஷல் வங்கி appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்