இலங்கையின் நீண்ட நாள் நிதியமைச்சரான ரொனி டி மெல் காலமானார்

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு 98 வயதாகும்.

இலங்கை வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட நாட்களாக நிதி அமைச்சர் பலவியை வகித்த பெருமை அவரையே சாரும்.

இலங்கைக்கு முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்திய சோசலிசவாதி எனும் பெயரையும் அவர் கொண்டுள்ளார்.

நிதி அமைச்சர் ஒருவரால் அதிக எண்ணிக்கையிலான வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்தவர் என்ற சாதனையை ரொனி டி மெல் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் 1977 முதல் 1988 வரை நிதி அமைச்சராக பணியாற்றியிருந்தார்.

ரொனி டி மெல் என அழைக்கப்படும், ரொனால்ட் ஜோசப் கொட்பிரே டி மெல் (Ronald Joseph Godfrey de Mel) 1925 ஏப்ரல் 11ஆம் திகதி பிறந்தார்.

The post இலங்கையின் நீண்ட நாள் நிதியமைச்சரான ரொனி டி மெல் காலமானார் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்