மீள்குடியேறிய பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு

திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் சிலருக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி நேற்று செவ்வாய்க்கிழமை (27) வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த யுத்த காலத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடத்தில் மீள்குடியேறியவர்களுக்கே ‘நிலைபேறான மீள்குடியேற்றத்துக்கும் மீள் ஒருங்கிணைப்புக்குமான விரிவான ஆதரவு’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. UNDP இன் அனுசரணையுடன் ஒபர் நிறுவனத்தினால் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.

தத்தமது வாழ்வாதாரத்துக்காக திறமையாக சுயதொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட உதவியின் கீழ் கைத்தொழில் உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

பயனாளிகளுக்கான கைத்தொழில் உபகரணங்களை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

The post மீள்குடியேறிய பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்