இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் 27ஆவது வருடாந்த சிறப்பு விருது வழங்கும் விழா மற்றும் வருடாந்த பொதுக் கூட்டமும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (26) நடைபெற்றன.
மேற்படி அமைப்பின் தலைவர் எம்.பி.போல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிர்மாணத் துறையில் திறமை காட்டிய துறைசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, நிர்மாணத்துறையில் சிறப்பு தேர்ச்சிமிக்க வல்லுநர்களின் ஆலோசனை வழிகாட்டல் சொற்பொழிவும் நடைபெற்றது.
அரச மற்றும் தனியார் துறை சிறப்பு நிர்மாண செயற்பாடுகள் காணொளி மூலமாக காட்சிப்படுத்தப்பட்டதுடன், கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற்றன.
The post இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் விருது விழா appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்