சமாதான நீதவான்கள் 20 பேருக்கு நியமனம்

புதிய சமாதான நீதவான்களாக தெரிவுசெய்யப்பட்ட 20 பேருக்கு நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவால் நியமனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்புக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் இந்த நியமனங்களை வழங்கி வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பரிந்துரைக்கமைய மட்டக்களப்பில் இந்த வருடத்தில் ஏற்கெனவே 17 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கி வைக்கப்பட்ட நிலையில், மேலும் 20 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிராந்திய அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன், இதில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராதா ஜெயரத்தின, நீதி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post சமாதான நீதவான்கள் 20 பேருக்கு நியமனம் appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்