இன்றைய காலகட்டத்திலும் பாகிஸ்தானின் ஹன்சா பகுதியில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக 150 வயது வரை வாழ்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. வாழ்க்கையை அனுபவிக்க ஒருவர் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது முக்கியமானது.
நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும், மாறிவிட்ட இன்றைய காலச்சூழலில், இளம் வயதிலேயே நீரிழிவு வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவது அதிகரித்து, ஆயுளைக் குறைக்கின்றன.
ஆனால் பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் 150 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள். அவர்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் என்னவென்று தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.
பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 100 முதல் 150 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர். இந்தப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் 70 வயது வரை இளமையாக இருக்கின்றனர். பெண்கள் 65 வயதிலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் நீண்ட ஆயுளின் இரகசியம் என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்னர், உலகின் பிற பகுதிகளில் வாழபவர்களின் ஆயுள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இங்குள்ள மக்கள் பனிப்பாறையில் இருந்து உருகிவரும் தண்ணீரைக் குடிக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஆண்டில் 2 முதல் 3 மாதங்கள் வரை உணவு உண்பதில்லை. இந்த உண்ணாவிரத காலத்தில், நீராகரம் மட்டுமே பருகுவார்கள்.
ஹன்ஸா சமூகத்தினரின் வாழ்க்கை முறை அதிக தொலைவு நடப்பது, பழங்கள், பச்சைக் காய்கறிகள், உலர் பழங்கள், பால் மற்றும் முட்டைகளை உள்ளடக்கிய உணவு உண்பதாகும். வாழ்க்கை மற்றும் உணவு முறையே அவர்கள் 70 வயதிலும் இளமையுடன் இருப்பதற்கும், 150 வயது வரை வாழ்வதற்கும் காரணமாகும்.
The post பாகிஸ்தானில் 150 ஆண்டுகள் வரை வாழும் ஹன்சா பள்ளத்தாக்கு மக்கள் appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்