கிழக்கு துர்கிஸ்தானை ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக அங்கீகரிக்குமாறு அறுபதுக்கும் மேற்பட்ட உய்குர் அமைப்புக்கள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
உலகளாவிய கிழக்கு துர்கிஸ்தான் மற்றும் புலம்பெயர் உய்குர் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய 61 அமைப்புக்கள் இக்கோரிக்கையை அமெரிக்க கொங்கிரஸில் முன்வைத்துள்ளன.
கிழக்கு துர்கிஸ்தானை தங்கள் தாயகமாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க கொங்கிரஸிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு துர்கிஸ்தான் தேசிய இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், திபெத் மக்களுக்கு ஆதரவளித்தது போன்று, தாய்வான் மக்களுடன் உறுதியாக நிற்பது போன்று, கிழக்கு துர்கிஸ்தான் மக்களுடனும் நின்று ஆதரவு நல்குமாறும் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.
The post உய்குர் அமைப்புகளினால் அமெரிக்காவுக்கு கோரிக்கை appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்