வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு

வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (27) அதிகாலை 5.20 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த ஹோட்டலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதோடு, எவரையோனும் பயமுறுத்தும் நோக்கில் இத்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் T56 வகை துப்பாக்கி ரவைகள் 9 மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த ஹோட்டலில் எவரும் தங்கியிருக்காத நிலையில், ஹோட்டலின் சுவர் மற்றும் இரும்புத் தூண் மீது இத்துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு appeared first on Thinakaran.

…read more

Source:: Thinakaran தினகரன்