பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இச்சந்திப்பில்,பிரித்தானிய சார்பில் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் மற்றும் சமாதானம், மனித உரிமைக்கான செயலாளர் ஹென்றி டொநாட்டி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.ரெலோவின் சார்பில் கட்சியின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன் எம்பி,உப தலைவர் ஹென்றி மகேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பு நேற்று (26)
கொழும்பில் நடைபெற்றது.ஐ,நா,மனித உரிமை பேரவைக் கூட்டம், தமிழர்களுக்கான நீதியை பெறுவதற்கான பிரித்தானியாவின் பங்கு உள்ளிட்ட தற்கால அரசியல் விடயங்கள் இச்சந்திப்பில் பேசப்பட்டன.
The post பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் ரெலோ உறுப்பினர்கள் விசேட சந்திப்பு appeared first on Thinakaran.
Source:: Thinakaran தினகரன்